Skip to main content

அடுத்த கட்ட கிரியேட்டிவ் கட்டுப்பாடு. Nano Banana Pro

உங்கள் படைப்பாற்றல் யோசனைகளை இப்போது வேடிக்கையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றலாம். கூடுதல் கேமரா மற்றும் லைட்டிங் கட்டுப்பாடுகள் மூலம் உங்கள் படங்களை எடிட் செய்யலாம், பல படங்களை ஒன்றிணைத்து மாக்-அப்களை உருவாக்கலாம், தெளிவான வார்த்தைகளுடன் போஸ்டர்களை வடிவமைக்கலாம், Gemini உதவியுடன் எளிதாக வரைபடங்களை உருவாக்கலாம். பிறகு, உங்களுக்குத் தேவையான பிளாட்ஃபார்மிற்கேற்றபடி அளவை மாற்றலாம். இன்றே Gemini ஆப்ஸில் Nano Banana Proவைப் பயன்படுத்திப் பாருங்கள். Google AI Plus, Pro மற்றும் Ultra பயனர்களுக்கு அதிகபட்ச அணுகல் கிடைக்கிறது.

Nano Banana Pro அறிமுகம்.

ஒவ்வொரு விவரத்தையும் டயல் செய்யுங்கள்.

உங்கள் படத்தின் ஸ்டைலை முழுமையாக மாற்றலாம். சூரிய வெளிச்சத்தில் இருந்து இருண்ட இரவு வரை மாற்றலாம், சரியான கோணத்தைக் கண்டறிய கேமரா கோணங்களுடன் விளையாடலாம், உங்கள் சப்ஜெக்ட்டை ஹைலைட் செய்ய ஃபோகஸை மாற்றலாம்.

ஸ்டைல் நொடிகளில் பயன்படுத்தப்படும்.

உங்கள் படத்தின் தோற்றத்தை மேம்படுத்துங்கள். எந்தவொரு ரெஃபரன்ஸ் படத்திலிருந்தும் வடிவமைப்பு, வண்ணம் அல்லது ஸ்டைலை எடுத்து உங்கள் சப்ஜெக்ட்டிற்குப் பயன்படுத்துங்கள். புதிதாகத் தொடங்காமல் வெவ்வேறு அழகியல்களைப் பரிசோதித்துப் பார்க்க இதுவே எளிதான வழியாகும்.

ஒரே படம், பல அளவுகள்.

நீங்கள் பகிரும் இடங்களில் உங்கள் படைப்புகள் தொழில்முறைத் தோற்றத்துடன் இருக்கும். நீங்கள் விரும்பும் விவரங்களை வெட்டாமலேயே, உங்களுக்குத் தேவையான எந்த வடிவத்திற்கும் அவற்றை உடனடியாக அளவை மாற்றலாம்.

உங்கள் வார்த்தைகள், சரியாகப் பயன்படுத்தப்படும்.

தெளிவான வார்த்தைகளுடன் லோகோக்கள், அழைப்பிதழ்கள், போஸ்டர்கள், காமிக்ஸ்கள் மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கலாம். பல மொழிகளில் உங்கள் படைப்பிற்கு ஏற்ற வார்த்தைகள்.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மாடலைத் தேர்வுசெய்யுங்கள்

Nano Banana

விரைவான, சாதாரண படைப்பாற்றலுக்குச் சிறந்த தேர்வு.

“வேகம்” மாடலுடன்
பின்வரும் பகுதிகளில் சிறந்து விளங்குகிறது:
கதாபாத்திரத்தின் நிலைத்தன்மை
பல்வேறு படங்களிலும் ஒரு நபர் அல்லது கதாபாத்திரத்தின் தோற்றத்தை ஒரே மாதிரியாக வைத்திருத்தல்.
படங்களை ஒன்றிணைத்தல்
படங்களைத் தடையின்றி ஒன்றிணைத்தல்.
குறிப்பிட்ட பகுதியில் மாற்றங்கள்
படத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் விரைவாகவும் துல்லியமாகவும் மாற்றங்களைச் செய்யலாம்.
Nano Banana Pro

மேம்பட்ட வெளியீடுகளுக்கும் துல்லியமான கட்டுப்பாட்டிற்கும் சிறந்த தேர்வு.

“சிந்தித்தல்” மாடலுடன்
இதற்கு முந்தைய பதிப்பின் பலங்களை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முறை அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது. இதில் பின்வருபவையும் அடங்கும்:
புதிது
மேம்பட்ட உரை ரெண்டரிங்
தெளிவான மற்றும் மிகவும் துல்லியமான வார்த்தைகளுடன் படங்களை உருவாக்குதல்.
புதிது
துல்லியமான எடிட்டிங் கட்டுப்பாடுகள்
லைட்டிங், கேமரா கோணம், தோற்ற விகிதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது போன்ற உங்கள் படைப்புகளின் மீது மேம்பட்ட கட்டுப்பாட்டை வழங்குகிறது.
புதிது
2K தெளிவுத்திறன்
தொழில்முறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற தெளிவான, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்குகிறது.
புதிது
மேம்படுத்தப்பட்ட உலக அறிவு
இன்ஃபோகிராஃபிக்ஸ், வரைபடங்கள் போன்ற பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு மிகவும் துல்லியமான மற்றும் விரிவான உருவாக்கங்களை அனுமதிக்கிறது.
புதிது
மேலும் படங்களை ஒன்றிணைக்கிறது
இன்னும் பல படங்களைத் தடையின்றி ஒன்றிணைக்கிறது.

பொதுவான கேள்விகள்

Gemini ஆப்ஸ் கிடைக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் AI பட உருவாக்க அம்சம் கிடைக்கிறது.

  • Nano Bananaவைப் பயன்படுத்த, கருவிகள் மெனுவில் ”🍌படங்களை உருவாக்கு” என்பதையும் மாடல் மெனுவில் “வேகம்” என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, ப்ராம்ப்ட்டைச் சேர்க்கலாம் அல்லது எடிட் செய்ய ஒரு படத்தைப் பதிவேற்றலாம்.

  • Nano Banana Proவைப் பயன்படுத்த, கருவிகள் மெனுவில் ”🍌படங்களை உருவாக்கு” என்பதையும் மாடல் மெனுவில் “சிந்தித்தல்” என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, ப்ராம்ப்ட்டைச் சேர்க்கலாம் அல்லது எடிட் செய்ய ஒரு படத்தைப் பதிவேற்றலாம்.

குறிப்பு: Nano Banana Proவைப் பயன்படுத்தி உங்கள் வரம்பை அடைந்ததும், அந்த வரம்பை அடையும் வரை Nano Banana பட மாடலைப் பயன்படுத்தும் வகையில் தானாகவே மாற்றப்படுவீர்கள்.

  1. எளிமையான முறையில் தொடங்குங்கள். <சப்ஜெக்ட்> <செயல்> <காட்சி> ஆகியவற்றின் படத்தை உருவாக்குof> என்று சொல்லுங்கள்< அதன் பிறகு, அதை எடிட் செய்யுங்கள். உதாரணமாக, "ஜன்னல் விளிம்பில் சூரிய ஒளி படும் இடத்தில் தூங்கும் பூனையின் படத்தை உருவாக்கு."

  2. உங்களால் முடிந்த அளவு விவரங்களைத் தெளிவாகச் சொல்லுங்கள். ப்ராம்ப்ட்டுகளில் உங்களால் முடிந்த அளவு விவரங்களைச் சேர்க்க வேண்டும். எனவே "சிவப்பு நிற உடை அணிந்த பெண்ணின் படத்தை உருவாக்கு" என்று சொல்வதற்குப் பதிலாக "சிவப்பு நிற உடை அணிந்த இளம் பெண் பூங்காவில் ஓடுவதைப் போன்ற படத்தை உருவாக்கு" என்று சொல்லுங்கள். நீங்கள் எந்தளவு அதிகமான விவரங்களை வழங்குகிறீர்களோ அந்தளவு உங்கள் வழிமுறைகளை Gemini சிறப்பாகப் பின்பற்றும்.

  3. படத்தின் காட்சியமைப்பு, ஸ்டைல், தரம் ஆகியவற்றையும் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படத்தில் விஷயங்களை எப்படி அமைக்க விரும்புகிறீர்கள் (காட்சியமைப்பு), நீங்கள் அடைய விரும்பும் விஷுவல் ஸ்டைல் (ஸ்டைல்), விரும்பிய அளவிலான படத் தரம் (படத் தரம்), தோற்ற விகிதம் (அளவு) ஆகியவை குறித்து யோசியுங்கள். “2:3 என்ற தோற்ற விகிதத்தில் ஆயில் பெயிண்டிங் ஸ்டைலில் விண்வெளியில் பறக்கும் மங்கலான சிறிய முள்ளம்பன்றியின் படத்தை உருவாக்கு” என்பது போல முயன்று பாருங்கள்.

  4. படைப்பாற்றல் என்பது உங்கள் நண்பன். தத்ரூபமான ஆப்ஜெக்ட்டுகளையும் தனித்துவமான காட்சிகளையும் உருவாக்குவதில் Gemini சிறந்தது. உங்கள் கற்பனைக்கு எல்லை இல்லை.

  5. காட்டப்படும் முடிவு உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், அதை மாற்றும்படி Geminiயைக் கேளுங்கள். எங்கள் பட எடிட்டிங் மாடல் மூலம், உங்களுக்கு விருப்பமான விவரங்களை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, பின்னணியை மாற்றுதல், ஆப்ஜெக்ட்டை மாற்றுதல், ஓர் விஷயத்தைச் சேர்த்தல் போன்றவற்றைச் செய்யும்படி Geminiயைக் கேட்டு உங்கள் படங்களை உஙகளுக்கு ஏற்றவாறு அமைக்கலாம்.

எங்கள் AI கொள்கைகளுக்கு இணங்க, இந்த AI பட உருவாக்கக் கருவி பொறுப்புடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Gemini மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட உண்மையான ஆர்ட்வொர்க்குக்கும் இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்ட, Gemini கண்ணுக்குத் தெரியாத SynthID வாட்டர்மார்க்கையும், தெரியும் வகையிலான இன்னொரு வாட்டர்மார்க்கையும் பயன்படுத்துகிறது. இவை காட்சிகள் AI ஜெனரேட்டட் என்பதைக் குறிக்கின்றன.

Gemini வழங்கும் பதில்கள் பயனர்களின் ப்ராம்ப்ட்டுகளை வைத்தே முதன்மையாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மற்ற ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் போலவே, இந்தக் கருவியும் சிலருக்கு ஆட்சேபனைக்குரியதாகத் தோன்றும் விஷயங்களை உருவாக்கக்கூடும். தம்ஸ்-அப் மற்றும் தம்ஸ்-டவுன் பட்டன்கள் மூலம் நீங்கள் வழங்கும் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கவனிப்பதுடன், அதற்கேற்ப மேம்பாடுகளையும் செய்வோம். மேலும் விவரங்களுக்கு, எங்கள் அணுகுமுறை குறித்து எங்கள் இணையதளத்தில் படியுங்கள்.

Gemini ஆப்ஸில் ஒரு படத்தைப் பதிவேற்றி அது Google AIயால் உருவாக்கப்பட்டதா என்று கேட்கலாம். எங்கள் டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் தொழில்நுட்பமான SynthID மூலம் இந்தச் சரிபார்ப்பு இயக்கப்படுகிறது. இது தற்போது படங்களுக்குக் கிடைக்கிறது. ஆடியோ மற்றும் வீடியோ ஆதரவு விரைவில் கிடைக்கும்.

எங்கள் வலைப்பதிவில் SynthID மூலம் AI உள்ளடக்கத்தில் வெளிப்படைத்தன்மையை எப்படி அதிகரிக்கிறோம் என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.

இணக்கத்தன்மையும் கிடைக்கும்நிலையும் மாறுபடும். வரம்புகள் பொருந்தும். 18+.